தேவதைகளின் தேசம்

தேவதைகளின் தேசம்
ட்யூவுஷன் சென்டர் தேவதைகளை காலை டயூஷன் தேவதைகள், மாலை டயூஷன் தேவதைகள் என்று இரண்டு பிரிவுகளாக என்னைப் போன்ற கல்வியாளர்கள் (7) பிரித்துள்ளனர் காலை 'டயூஷன் தேவதைகளை மேலும் நிரண்டாகப் பிரிக்கலாம் காலை ஆறு டூ வழு டயூஷன் தேவதைகள், குளிக்காமல் தூங்கி வழிந்த முகத்துடன் வருவதால் கொஞ்சம் மங்கலாகத்தான் இருப்பர். ஆனால் ஏழு டூ எட்டு டயூஷன் தேவதைகள் குளித்து முடித்து பளிச்சென்று வருவதால் அந்த ட்யூஷனுக்குதான் பசங்கள் கும்பல் அள்ளும்
அக்காலத்தில் ட்யூஷனுக்கு வருபவர்கள் பெரும்பாலும் நன்றாகப் படிக்காதவர்கள்தான். எனவே டீச்சர், "ஒண்னும் ஒன்னும் ரெண்டு" என்று சொன்னால் கூட, 'அதெப்படி? என்று தேவதைகள் மலங்க மலங்க விழிக்கும்போது, அக்கண்களில் தெரியும் களங்கமற்ற பரிசுத்தத்தை நீங்கள் இமயமலை நதிகளிலும் காண முடியாது சில டீச்சர்கள் தேவதைகளை, எழுப்பி, "எய்ட் டிவைட்ட் பை டூ என்ன?" என்ற கடினமான கேள்வியைக் கொஞ்சம் கூட இரசுகமே இல்லாமல் கேட்பார்கள். அதற்குப் பதில் தெரியாமல் அத்தேவதைகள் அவமானத்தில் கண்கலங்கித் தவிததபோதுதான், நம் தேவதாபிமானமற்ற கல்விமுறையை 'மாற்றவேண்டிய அவசியம் குறித்து நான் முதன்முதலாகச் சிந்தித்தேன்.