வாவ்... ஐந்தறிவு..!

வாவ்... ஐந்தறிவு..!
ஓர் அடர்கானகத்துக்குள் நுழைந்து வந்த சிலிர்ப்பைத தருகிறது ராஜேஷ்குமாரின் 'வாவ்... ஐந்தறிவு!' ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் பறவைகளின் கீச், கீச் ஒலிகளும், விலங்குகளின் உறுமல்களும் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை சுறா, நீலத் திமிங்கலம் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது, இந்துமகா சமுத்திரத்தில் நீச்சலடிப்பதைப்போல் ஒரு ஜில்லிப்பு
இந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அது இன்றைய இளைய தலைமுறையினர் விலங்குகள், பறவைகளின் உலகைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் மீது பரிவு, அக்கறை கொள்ளவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உணரவும், அந்த உயிரிகளால் மனிதகுலம் அடையும் நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளவும் நிச்சயம் உதவும்!
விலங்குகள், பறவைகளின் தாய்ப்பாசம், தந்திரம், மூர்க்கம், காதல் என்று இதிலுள்ள ஒவ்வொரு தகவலுமே அக்மார்க் ஆச்சரிய ரகம். அவை நம்மை வியப்பின் உச்சத்துக்கே அழைத்துச் செல்கின்றன.