அயோத்தி

அயோத்தி
சுதந்தர இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சைகளில் ஒன்று, ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி பிரச்சனை. அதைச் சரித்திரமாகப் பார்ப்பதா, புராணமாக நினைப்பதா, மக்களின் நம்பிக்கை என்று மதிப்பளிப்பதா, அறிவியல் ரீதியில் ஆராய்வதா, ஆவணங்களின் அடிப்படையில் எடை போட்டுப’ பார்ப்பதா, எதைத் திசையில் பார்த்தாலும் இடியாப்பச் சிக்கல். அரசியல் கட்சிகள், மதவாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இதில் சேர்ந்துகொண்டு விடவே, நடக்க்ககூடாத விபரீதங்களெல்லாம் நடந்துவிட்டன. அவற்றின் பின்விளைவுகள் இன்னும் மோசமான அதிர்வுகளை உண்டாக்கின.
அயோத்தி பற்றி அனைத்துக் கோணங்களிலும் அலசும் ஒரு முழுமையான எனசைக்ளோபீடியா இது. ‘அயோத்தி: நேற்றுவரை’ என்ற பெயரில் வெளியான முதல் பதிப்பில் மிக்பபெரிய வரவேற்பைப் பெற்ற இந்த நூல், பல கூடுதல்தகவல்கள், நீதிமன்றத் தீர்ப்பு விவரங்களுடன் இப்போது திருத்திய இரண்டாம் பதிப்பாக வெளியாகிறது!