வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ)
வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ)
ஒருவர் விழிப்புணர்ச்சியுடன் காணப்பட்டால், விவேகியாகத் தெரிந்தால், வீரனாகக் காட்சி தந்தால், உடனே வகுப்புவாதி என்ற சொல் கிளம்பும். அவரை வதைக்க! இதுதான் சென்ற 20 ஆண்டுக்கால தமிழ்நாட்டு அரசியல்!” "வகுப்புவாதி! தன்னலக்காரரின் அகராதியில் முளைத்த சொல்! என்றைக்கு அநீதி என்று
ஆதிக்ககாரர்களைப் பார்த்து விழிப்பு நிலை பெற்ற அடிமைகள், இது என்னய்யா வாதாட முன்வந்தனரோ, அன்றே கிளம்பிவிட்டது இச்சொல்!”
அறிஞர் அண்ணாதுரை
கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும். இந்த நிலைக்கு மாறாக ஒரு சில வகுப்பினருக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இதனை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. அதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன. 1928 முதல் இட ஒதுக்கீடு உரிமைக்கான சட்ட முன் வடிவம் கொண்டுவரப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் செண்பக துரைராசன் முதலியோர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உரிமை பறிபோனது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இந்தக் காலச் சூழலில் 1951இல் எழுதப்பட்டதே இந்த நூல்.
வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ) - Product Reviews
No reviews available