அவள் அப்படிதான்
அவள் அப்படிதான்
கமலும், ரஜினியும் அந்த சமயத்தில் பல படங்களில் நட்த்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவரும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள், இருந்தும் 'அவள் அப்படிதான்' படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.
தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப் பற்றி ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப் பட இயக்குனர்கள் பற்றியும், அவரது படங்களையும் பற்றியும், அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடன் ஆனந்த சாருடன் அவர் பல திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பார்.சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.
இளையராஜா அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர். பாடல்களுக்கும் மெட்டமைக்கும் நாட்களில் காலை எட்டுமணிக்கெல்லாம் அவரும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார்.
தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவில் சபையா வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ பளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையா வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும் பத்திரிககைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஆனால், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.
அவள் அப்படிதான் - Product Reviews
No reviews available