அழகி

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
அழகி
எனக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த நினைவுகள் "அழகி" திரைப்படம் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது.அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும்தான்.எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்க முடியும்?வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிற திரைப்படங்கள் நம்மிடம் உருவாவது மிக அரிதாகவே எப்போதாவதொன்றுதானே நிகழ்கின்றது என்கிற ஆதங்கந்தான் என்னையும் ஒரு திரைப்படத்தை நெறியாள்கை செய்வதற்கு ஆட்படுத்தியது.நன்றாகப் படம் இருந்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார்கள் எனத்தான் நினைத்தேன்.பிறகுதான் தெரிந்தது.இங்கிருக்கும் வியாபாரிகள் நல்ல மக்கள் ரசனைக்குரிய திரைப்படத்தைத் தவிர மற்றவைகளை மட்டுமே வாங்குவதில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது.