ஆகஸ்ட் 15 : துக்க நாள் - இன்ப நாள்

ஆகஸ்ட் 15 : துக்க நாள் - இன்ப நாள்
தொகுப்பாசிரியர்:எஸ்.வி.ராஜதுரை அவர்கள்.
1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள் கட்டுரைகள் மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் பெரியாரின் சுயமரியாதை இயக்க திராவிடர் கழக வரலாறு குறித்து எஸ்.வி ராஜதுரை வ.கீதா எழுதிய பெரியார் சுய மரியாதை சமதர்மம் எஸ்.விராஜதுரை எழுதிய பெரியார் ஆகஸ்ட் 15 ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் அவற்றின் துணைநூலாகவும் விளங்குகிறது பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே பிளவு ஏற்பட்டு தி.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் திமுக வை அமைத்ததற்கு பெரியார் -மணியம்மையார் திருமணமே காரணமாயிற்று என்று பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை மறுத்து ஆகஸ்ட்15 குறித்து பெரியாரும் அண்ணாவும் மேற்கொண்ட மாறுபட்ட நிலைபாடுகளே பிளவுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தன என்று கூறுகிறார் பதிப்பாசிரியர் எஸ்.வி ராஜதுரை பெரியாரின் நிலைப்பாடு சுயமரியாதை இயக்க திராவிடர் கழக அரசியல் கண்ணோட்டத்திற்கு முரண்படாததாகவும் அண்ணாவின் நிலைப்பாடு அதற்கு முரண்பட்டதாகவும் இருந்தது இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டது பெரியாரின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்த பழம்பெரும் சுயமரியாதை இயக்க நீதிக்கட்சி செயல் வீரரும் அச்சமயம் பெரியாரிடமிருந்து விலகி நின்றவருமான கேசரியின் (ஓ.திருமலைசாமி) நீண்ட கட்டுரை இந்நூலின் மிகச் சிறப்பான பகுதி..