விண்வெளியில் ஒரு பயணம்

விண்வெளியில் ஒரு பயணம்
.விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற முறையில், சுனிதா வில்லியம்ஸின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களையும், அவர் விண்வெளியில் செய்த சாதனைகளையும் இந்நூல் தெரிவிக்கிறது. மேலும், விண்வெளி ஓடங்களின் அமைப்பையும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் அவை செயல்படும் விதத்தையும் தெரிவிக்கிறது. ஒரு விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான அடிப்படைத் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் விண்வெளியில் ஆற்ற வேண்டிய பணிகளைப் பொருத்துத் தரப்படும் பயிற்சிகள் போன்ற தகவல்களையும், ஒவ்வொருவரும் விண்வெளிப் பயணத்தின்போது ஆற்றிவரும் பணிகளையும் இந்த நூல் விளக்குகிறது. தங்களது தினசரி வாழ்க்கைத் தேவைகளான உடலை சுத்தப்படுத்துவது, உணவு உண்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்றவற்றை விண்வெளி வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையில் எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்ற தகவலைப் படிக்கும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. விண்வெளியில் நடக்கவேண்டிய அவசியம் என்ன; விண்வெளி வீரர்கள் அந்த சமயத்தில் அணியும் ஆடையில் உள்ள பிரத்தியேக அம்சங்கள் என்னென்ன; அவை ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் காணப்படுகின்றன;