வீழ்வே னென்று நினைத் தாயோ? (சி.மகேந்திரன்)

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
வீழ்வே னென்று நினைத் தாயோ? (சி.மகேந்திரன்)
வீழ்வே னென்று நினைத் தாயோ?
ராஜபக் ஷேவின் உலகம். இன அழிப்புக் கொலைக்குற்றத்தை வெற்றிக் கொண்டட்மாக மாற்றிக் கொண்டுவிட்டது. தமிழ் மக்களின் அழிவு பற்றிய வெற்றிப் பாடல்கள் அங்கு இசையமைக்கப்பட்டு, பாடல்களாக பாடப்படுகின்றன. வெற்றியடைந்தவர்களுக்கு பாடல்கள் உண்டு என்றால், தோற்றுப்போனவர்களுக்கு மட்டும் பாடல்கள் இல்லாமல் போய்விடுமா? வெற்றிப் பாடல்கள், போதை கொண்டு மயக்கத்துடன் நடன அரங்குகளில் வெறி பிடித்து ஆடுகின்றனர். தோற்றுப்போனவர்களின் பாடல்கள், வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து, மரண அறைகளை கருவறைகளாக மாற்றி, புதிய பிறப்பைப் பெற்றெடுக்க எந்த சூல் வலியையும் சந்திக்கும் தைரியம் கொண்டு மெளனமாக செயல்படுகிறது!
முள்ளிவாய்க்கால் அழிவற்றது;
அது, விதைப்பதை விதைத்துவிட்டு,
அறுவடைக்காகக் காத்து நிற்கிறது!