எனக்குப் பிடித்த கவிதைகள்

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
எனக்குப் பிடித்த கவிதைகள்
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார்.
நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செறிவுகள் மற்றும் தனிமையின் பாடல்களாய் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிரபலமடைந்த கவிஞர்கள் அல்லது இப்பொழுதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர்களென பேதம் பார்க்காமல் அவை உண்மையில் கவிதைகளாக சிறப்படைந்திருக்கிறதா என்பதை மட்டுமே அய்யப்பன் இத்தொகுப்பில் கவனித்துச் சேர்த்திருக்கிறார்.
- யவனிகா ஸ்ரீராம்