வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள்

வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள்
தங்கள் செயலால் - ஆற்றலால் - சாதனைகளால் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள் ஆனால் தனிமனிதர்களால் சரித்திரம் உருவாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி என்ற தனிமனிதரின் நெஞ்சிலே மூண்ட சுதந்திரக்கனல்தான் அடிமைத்தளையைச் சுட்டெரித்து, சுதந்திரம் பெற்றுத் தந்தது. தந்தைப் பெரியார் என்ற தனிமனிதரின் சிந்தனையில் பூத்த சமத்துவ உணர்வுதான் சமூக நீதிக்குச் சாளரம் திறந்து விட்டது.
-இப்படி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 23 வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையில் நடந்த மற்க்க முடியாத - மாற்றங்களுக்கு வழி அமைத்த சம்பவங்களை “டைரி குறிப்பு“ போல் தொகுக்கப் பட்டுள்ளது.
மாணவர்களுக்கும் - மாணவர்களுக்கு அறிவுத் தீபமேற்றும் ஆசிரியர்களுக்கும்கூட பயன்படும் இந்நூல்!
இதைச் சிறப்பாக தொகுத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் சபீதாஜோசப்
-பதிப்பகத்தார்