மாபெரும் இரகசியம்

மாபெரும் இரகசியம்
ஒரு மாபெரும் இரகசியம் உங்கள்
கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது...
இந்த மாபெரும் இரகசியம் தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கைப்பற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, தொலைக்கப்பட்டு, திருடப்பட்டு ஏராளமான பணத்திற்காக வாங்கப்பட்டு, இறுதியாக நம்மை வந்தடைந்துள்ளது. கண்டுபிடிப்பாளர்கள், இறையியலாளர்கள், அறிவியலறிஞர்கள் மற்றும் மாபெரும் சிந்தனாவாதிகள் ஆகியோருடன் சேர்ந்து இப்புராதன இரகசியத்தின் மகத்துவத்தை வரலாற்று நாயகர்களில் மிகப் பிரபலமானவர்கள் சிலரும் புரிந்து வைத்திருந்தனர். அவர்களில் பிளாட்டோ, சுலீலியோ, பீத்தோவன், எடிசன், கார்னெகி, ஐன்ஸ்டீன் ஆகியோரும் அடங்குவர். இப்போது அந்த இரகசியம் உலகின் பார்வைக்காக முதன் முறையாக வெளிப்படுத்தப்படுகிறது.
'இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி. விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள் உண்மையில் நீங்கள் யார். என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும்' உணர்ந்து கொள்வீர்கள் - முன்னுரையிலிருந்து