வாங்க பழகலாம்!
வாங்க பழகலாம்!
எங்கு எப்படிப் பேசுவது, யாரிடம் எதைப் பேசுவது, எங்கு பேசாமல் இருப்பது என எல்லாமே தகவல்–தொடர்பில் முக்கி–யம். பழகும் கலையில் அடிப்படையான விஷயம் பேச்சுதான். வீட்டில், ஆபீஸில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் கூட்டத்தில் எப்படிப் பேசிப் பழகி எல்லோரின் மனதையும் வெல்வது என்ற கலையைக் கற்றுக்–கொள்வது வாழ்க்கை வெற்றிக்கு அவசியமாகிறது. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்களில் இதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா என எத்தனையோ உறவுகள் இருந்தன. இன்று ஒரு வீட்–டில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு பேரும் ஆளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் திரையைப் பார்த்துக்–கொண்டு நாட்களை நகர்த்தும் நிலையில் இருக்கின்றன வீடுகள். இப்படிப்பட்ட சூழலில் ‘வாங்க... பழகலாம்!’ என்ற இந்த நூல், நம் இளைய தலைமுறைக்கு அவசியம் தேவைப்படுகிறது.
வாங்க பழகலாம்! - Product Reviews
No reviews available