மனம் மயங்குதே

0 reviews  

Author: சுபா சார்லஸ்

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனம் மயங்குதே

சந்திர மண்டலத்துக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் சாட்டிலைட் அனுப்பிவிட்டோம். ஆனால், நமது சொந்த மனதைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. மனதில் என்ன மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன? அவற்றில் உண்டாகும் மாற்றங்கள் என்ன? அதனால் ஒருவரது செயல்கள் எப்படி மாறுகின்றன? இப்படியாக மனதுக்கும் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

பதற்றம் ஏன் ஏற்படுகிறது? குழப்பம் வரக் காரணமென்ன? கவலை எப்படித் தொற்றுகிறது? பொறாமை தலைதூக்குவது ஏன்? எந்த வார்த்தை, எப்படிப்பட்ட முகபாவம் நம்மை உணர்ச்சிவயப்படச் செய்கிறது? இப்படி எல்லா கேள்விகளுக்கும் காரணம் சிந்தனைப் பிறழ்வு. மனித உறவுகளில் வரும் சிறியது முதல் பெரியது வரையிலான பிரச்னைகளுக்கு எண்ணங்கள் தடம் புரள்வதே காரணமாகிறது. அப்படி ஒவ்வொரு சிந்தனைப் பிறழ்வைப் பற்றியும், இந்த நூலில் மனநல மருத்துவர் சுபா சார்லஸ், தன் அனுபவத்தில் கண்ட உண்மைச் சம்பவங்களை வைத்து அலசி ஆராய்ந்து பேசியிருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள உறவுகளையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இந்த நூல் உதவும்.

மனம் மயங்குதே - Product Reviews


No reviews available