உருமாற்றம்
உருமாற்றம்
தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட்
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார். காஃப்கா நவீனக் கலைமரபில் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிக்காசோ, மல்லார்மே ஆகியோருடன் வைத்து எண்ணத்தக்கவர் என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய கலை “புதிர் நிறைந்த தெளிவு. இலக்கியம் இது வரையில் சந்தித்திராத நம்மை உலுக்கிப் பிழியும் பூடகமான படைப்பு,” என்றார் ஒரு விமர்சகர். கவிஞர் டபிள்யு. எச். ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் தாந்தே என்று புகழ்ந்தார்.
உருமாற்றம் - Product Reviews
No reviews available