பெருவலி (புதினம்)
Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
பெருவலி (புதினம்)
மூத்தவள். பதினான்கு வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் நுண்ணறிவு அவளுக்கு இருந்தது. பாரசிக நூல்களில் புலமையும் இந்துப் புராணங்களில் ஞானமும் குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சியும் இருந்தன.
அவளுக்கு வரலாறும் கவிதையும் தெரிந்திருந்தன. நடனமும் இசையும் தெரிந்திருந்தன. சிற்பக் கலையிலும் கட்டிடக் கலையிலும் நிபுணத்துவம் இருந்தது. அவற்றைச் சார்ந்து கனவு காணவும் கனவை மெய்ப்பிக்கவும் தெரிந்திருந்தது.
அவளிடம் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் இருந்தன. அடிமைகள் இருந்தனர். கப்பல்கள் இருந்தன. செல்வக் களஞ்சியம் இருந்தது. அதிகாரம் இருந்தது.
எனினும்,எது இருந்தால் இவை மேன்மை பெறுமோ அந்தச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. காரணம் ஜஹனாரா பெண்ணாக இருந்தாள்.
பெருவலி (புதினம்) - Product Reviews
No reviews available