உண்மைக்கு முன்னும் பின்னும்

Price:
270.00
To order this product by phone : 73 73 73 77 42
உண்மைக்கு முன்னும் பின்னும்
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவார்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது.
ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நன்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். இது தமிழ்ச் சூழலில் பல விவாதங்களை எழுப்பக் கூடிய படைப்பு.