உடல் மண்ணுக்கு
உடல் மண்ணுக்கு
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம், பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமலஎன்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னாலும், மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள்வரை அங்கே புரிந்திருக்கிற திருவிளையாடல்கள் குலைநடுங்கச் செய்பவை. தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னனியை.வெகு நேர்த்தியாக விவரிக்கிறார் முஷரஃப் உண்மையில் அல்காயிதாவில் அமெரிக்கா பாதிக்கப்பட்டதைக் காட்டிலும் ,பாகிஸ்தான் அதிகம் அவதிப்பட்டிருந்தது என்கிறார் ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமே கடத்தச் சொன்னது,விமான எரிப்பொருள் தீர்ந்து கொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த விவரிப்புக்கு அப்பாற்ப்பட்ட பதற்றம்,மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி...முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்தரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகினார்
காஷ்மீர் குறித்து அவரது கருத்து:
காஷ்மீரை முன்வைத்து ,கார்க்கில் வரை நடந்துள்ள ஒவ்வொரு யுத்தத்திலும் பாகிஸ்தான் ராணுவமும் இந்திய அரசும் உண்மைகளை த் திரித்துச் சொல்வதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல அவரது ராணுவ வாகனத்துக்கு த் தீவிரவாதிகள் வைத்தத்தாகச் சொல்லும் குண்டுகளைக் காட்டிலும் வீரியம் மிக்க குண்டுகளை இந்த நூலில் முஷரஃப் வைத்திருக்கிறார் .இதைவிட சர்ச்சைக்கிடமான ஒரு புத்தகம் 2006-ம் ஆண்டு வெளியாகவில்லை.
உடல் மண்ணுக்கு - Product Reviews
No reviews available