ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்
ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி. ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததுதான் பிரச்னையே. ஒரு விஷயம். ஜெமினி, தன்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான் வைத்துக் கொண்டார். ஜெமினியின் காதல் பிரயாணத்தில், எல்லா அத்தியாயங்களும் ரசமானவை. அதனால்தான் இன்று வரை ஒரு நிரந்தர காதல் மன்னனாக அவரால் ஜொலிக்க முடிகிறது. ஒட்டுமொத்த திரையுலகே பொறாமைப்பட்ட ஜெமினி-சாவித்ரி ஜோடியின், வெற்றிகரமான காதல் வாழ்க்கை, தோல்விகரமான இல்லற வாழ்க்கை இரண்டுமே உணர்வு பூர்வமாகmபதிவாகியுள்ளன. ஜெமினியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால், கடந்த ஐம்பதாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காண முடியும்.