திருப்பாவை

திருப்பாவை
..."நீ எங்களுக்கு வழிகாட்டிக் காப்பாய் " என்றே இங்கே வந்தோம் .நீ மறந்தாலும் நாங்கள் விடுவதில்லை ..."என்றனர்.ஸ்ரீராமானுஜர் சொல்லச் சொல்ல பாஷ்யப் பொருளை எழுதினார் கூரத்தாழ்வான் .அப்போது ஒரு வார்த்தையின் பொருன் தொடர்பாக , ஜீவன் , பரமனின் சேஷம் என்ற பொருள் தராமல் விளக்கம் சொன்னதால் எழுதாமல் சும்மா இருந்தார் கூரத்தாழ்வான்.அதுகண்டு ராமானுஜர் கோபம் கொண்டார். அப்போதும் ஆச்சார்யரே ரட்சகர் என்ற மெளனமாக அவரை விடாது இருந்த கூரத்தாழ்வன் ,ராமானுஜர் பற்றி அவர் அப்படி என்னை நடத்தவும் உரிமை உண்டு என்றுரைத்தார்.பிறகு ராமானுஜரே அவரை மெச்சினார்.அதுபோல் இங்கே கோபிக்காவிட்டாலும் சும்மா கிடந்த தலைவி போன்றவளே ரட்சகி என்று விடாமல் இவர்கள் எழுப்பலாயினர்.ஆகவே அழைத்த ஆகவே அழைத்த அந்தப் பெண்களின் சம்பிரதாயம் மாறாத பேச்சால் ,மகிழ்ந்தவள் எழாது அப்படியே இருந்தாள்.பலராமனும் கிருஷ்ணனும் மதுரா நகரில் போனபோது ஓரு பூக்காரர் பூச்சூட்டி மகிழ்ந்து ,வீட்டுக்கு அழைத்து உபசரித்தார்.அவருக்கு கிருஷ்ணன் அன்புடன் அருளினான். அவரை மாலாகாரர் என்பர்.அவரை மாமன் என்பர் . அந்த மாலாகாரரைபோல பகவானருள் பெற்றவர் பெரியாழ்வர்.அவர் மகள் ஆண்டாள் ஆகையால் தந்தையின் நினைவிலே அந்த மாலாகரரை மாமனாகக் கருதிச் சொன்னாள் என்பதை ஆய் எனும் ஜந்ந்யாசார்யர் தம் நாலாயிரப்படி விளக்கத்தில் குறித்தார்.வேற்று ஆண்களை தாயின் சகோதரராக மதித்து , மாமன் என்று விளித்தல் -தமிழர் வழக்கம் .மாமான் மகளாகிய நெருங்கிய உறவுள்ள நீ எங்கள் கூற்றுக்கு உதவ வேண்டும் என்று உண்ர்த்துவதே இது.