திருப்பதி[ஒரு வாழ்க்கைக்கையேடு]

திருப்பதி[ஒரு வாழ்க்கைக்கையேடு]
தமிழில் - நாகலட்சுமி சண்முகம்
"திருப்பதி குறித்த ஒரு நவீனக் கையேடு"
-திரு கனுமுரி பாபிராஜூ
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்
தலைவர்
நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்
சவால்கள் மற்றும் சோதனைகளுக்கும் திருப்பதி வெங்கடாசலபதியைச் சுற்றியிருக்கும் தத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு முதன்முறையாக இந்நூலில் எடுத்துரைக்கப்படுகிறது எது பாவம், எது புண்ணியம் என்பதிலிருந்து துவக்கி, வெற்றி, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கான வழிமுறைகள்வரை இப்புத்தகம் அனேக விஷயங்களை அலசி ஆராய்கிறது. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக் கோவிலில் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை இது விவரிக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள்
- திருப்பதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
- பகவானின் ஊர்வலங்களில் உபயோகிக்கப்படும் பல்லக்குகள்
- காலையில் சுவாமியை கண்விழிக்கச் செய்யவதற்கு உச்சரிக்கப்படும் ஸ்லோகங்கள்.
- கோவியில் பகதர்கள் கடைபிடிக்க வேண்டிய நியதிகள்.
பக்தர்களை நேசிக்கின்ற அவர்களது ஆசைகளைப் பூாத்தி செய்கின்ற அவர்களின் பாவங்களைக் களைந்தெறிகின்ற திருப்பதி வெங்கடாஜலபதியின் கதையையும் பெருமையையும் எடுத்துரைக்கும் இந்நாலுககுத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பிரதான அர்ச்சகர் அணிந்துரை எழுதியுள்ளார் தங்கள் விதியை மாற்ற முடியும் என்று நம்புகின்றவர்களுக்கும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்குமான அற்புதமான கையேடு இப்புத்தகம்