திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (சுவாசம்)
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (சுவாசம்)
அடியாருக்கு ஆண்டவன் சொன்னது பகவத்கீதை. அடியார் ஆசாரியாருக்குச் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
திருக்கோளூருக்கு ஸ்ரீ ராமானுஜர் வந்த வேளையில், மோர் விற்கும் பெண் ஒருத்தி அந்த ஊரைவிட்டு வெளியே செல்லக்கண்டார். அவளிடம், “தேடிப் போகும் ஊர் என இவ்வூரைப் பற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே” என்று கேட்டார். அவளும் சலிக்காமல், “முயல் புழுக்கையை எங்கே விட்டால் என்ன? அதில் என்ன மாற்றம் இருக்கும்?” என்றாள். ஆச்சரியமுற்ற யதிராஜரிடம், பக்தியில் சிறந்த பெரியோர் செய்த 81 செயல்களைச் சுட்டிக்காட்டி, “அப்படி நான் இருந்தேனா?” என்றாள்.
ஒரு சாதாரணப் பெண்பிள்ளை மகான் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த அர்த்தம் பொதிந்த 81 கருத்துகள்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
‘அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே’ எனத் தொடங்கி, ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே” என முடியும் 81 விஷயங்களை எடுத்துரைத்து “அவர்களைப் போல நான் இறைவன் மீது பக்தியுடன் இருக்கவில்லையே. அதனால்தான் இவ்வூரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலுரைத்தாள்.
அந்தப் பெண் 81 ரகசியங்களில் வைணவத்தின் சாராம்சங்களை முழுமையாக எடுத்துரைக்கிறாள். அவை அனைத்தும் ஸ்ரீ ராமானுஜருக்கு நன்கு தெரிந்த விஷயங்களாயினும், அப்பெண்பிள்ளை சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தார்.
ஜெயந்தி நாகராஜனின் அற்புதமான எழுத்து நடையில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகம் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியங்களாக நமக்குக் கூறியுள்ள பக்தி நெறியின் சாராம்சத்தையும் சரணாகதி தத்துவத்தின் அடிப்படைகளையும் எளிய முறையில் விளக்குகிறது
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (சுவாசம்) - Product Reviews
No reviews available