தற்காலச் சிறந்த கவிதைகள்

தற்காலச் சிறந்த கவிதைகள்
கடந்த பத்தாண்டுகளின் நவீன கவிதைத் தடத்தை பெரும் அவதானிப்புடன் பதியவைக்கின்றது இத்தொகுப்பு. காலமென்னும் வனத்தில் இலையிலிருந்து இலைக்கு சொட்டும் நீராக நூற்றாண்டு கால மரபின் ஈரம் படிந்த கவிதைகள் இவை. மொழியும் சமூகமுமான ஒரு பெருநதியை உற்பத்தி செய்வதில் இதுபோன்ற கவிதைகளின் பங்கே ஆதாரம். கவிதைகளுக்காகவே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட நாடோடிக்கவி விக்கிரமாதித்யனின் தேர்வு இந்த கவிதைகள். அவரது செழுமையான பின்புலம் கொண்ட மரபு சார்ந்த அறிவு, கைக்கண்ணாடியாக இதில் பயன்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகம் யாருக்கும் முன்வந்து எந்தப் பொறுப்பையும் அளித்ததில்லை. கண்டுகொள்ளப்படாத தமிழ் நவீன கவிதை வெளியில், நல்ல கவிஞர்களையும், நல்ல கவிதைகளையும் இனம்காணும் பொறுப்பை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ் கவிதை வரலாற்றில் கடந்த பத்தாண்டுகளின் முக்கிய ஆவணம் இந்நூல்.