தபால்தலை சாதனையாளர்கள் (பாகம் 2)
தபால்தலை சாதனையாளர்கள் (பாகம் 2)
கீமோதெரபியின் தந்தை என்று அறியப்படும் மருத்துவர் எல்லப்பிரகதா சுப்பாராவ்.
• கங்கையாற்றில் மீன்பிடிப்பதற்குத் தடை விதித்த ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆற்றின் குறுக்கே சங்கிலி கட்டி படகு போகுவரத்தைத் தடுத்து நிறுத்திய வீரப்பெண்மணி ராணி ரஷ்மோனி.
• சீக்கியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையே நடந்த போரில் இரு தரப்பு வீரர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் புகட்டிய மாமனிதர் பாய் கண்ணையாஜி.
• இன்னொரு ஜாலியன்வாலா பாக் சம்பவம் நிகழாமல் தடுத்த சந்திர சிங் கர்வாலி.
• எவெரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த ராதாநாத் சிக்தர்.
• காஷ்மிரிலிருந்து அஸ்ஸாம் எல்லைவரை நடந்தே நில அளவீடு செய்த நைன் சிங்.
இவர்களைப்போன்ற சாதனை மனிதர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. இவர்களைப் போன்ற சாதனையாளர்களை நினைவுகூரும் வகையில் இந்திய அரசாங்கம் அவர்களுடைய தபால்தலைகளை வெளியிட்டுக் கௌரவிப்பது வழக்கம்.
தபால்தலை சாதனையாளர்களான இவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் சாதனைகளும் அடங்கிய தொகுப்பு இந்தப் புத்தகம்.
காமராஜ் மணியின் ‘தபால்தலை சாதனையாளர்கள் - பாகம் 1’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் 2ம் பாகம் இப்போது வெளியாகியுள்ளது
தபால்தலை சாதனையாளர்கள் (பாகம் 2) - Product Reviews
No reviews available