தமிழ்க் கடவுள் (கவிஞர் வாலி)
கச்சியப்பரின் கந்த புராணத்தை தமிழ்க்கடவுளாக நம் கைகளில் த வைத்திருக்கிறார் கவிஞர் வாலி, கதைப்போக்கு நன்கு தட்சகாண்டத்தை முதலில் எடுத்துக்கொண்டு. விளங்க தேவியர் திருமணங்களுடன் கதையை மங்கலமாக நிறைவிக்கிறார். கச்சியப்பர்ஆயிரம் ஆயிரம் பாடல்களில் பாடிய தேவாசுர யுத்தத்தை, இவர் அநாயசமாக சில வரிகளில் பதியவைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். சிருங்கார ராம். அளவுபடவே நூலுள் இடம்பெறுகிறது. வீரபாகு தூது, பானுகோபன் வீரம், சிங்கமுகன் அறிவுரை. சுக்கிரனின் தீய வழிகாட்டல், மாயையின் மயக்கு மொழிகள், குரபன்மனின் பெருவீரம் அவன் சிவபக்தி, முருகன் கை வேலை தமிழ் ஆயுத எழுத்தோடு பொருத்துதல் எல்லாம். காப்பிய எழில் குன்றாது கவிஞர் வாலி அவர்களால் புனையப்பட்டுள்ளது பெருஞ்சிறப்பு.
கந்தபுராணம் ஓதுவதற்கென்றே யாழ்ப்பாணத்தார் பல நியதிகளை வகுத்தனர். அத்தகு பெருமைமிக்க நூல், காலத்தின் தேவை கருதி, முருகன் திருவுளப்பாங்கின் மகிமையை புதுக்கோலம் பூண்டு, தமிழ்க் கடவுளாக நம் கரங்களில் தவழவைத்தது நாம் செய்த புண்ணியப்பேறு