தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்
ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒருநான் இரவு ஒரு நகைச்சுவை நடிகர் வீட்டுக்கு நேரில் சென்று தெய்வப்பிறவி படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நீங்கள் தான் நடிக்கணும்! உடனே ஏவி.எம் ஸ்டூடியோவுக்க கிளம்புங்க!" என்றார்.அப்போது தான் அந்த நடிகர் வேறொரு படத்தில் நடித்து முடித்து வீடு திரும்பினார்.மிகவும் களைப்பாக காணப்பட்டார்.இருந்தாலும் மறுபேச்சு பேசாமல் உடனே படப்பிடிக்கு சென்று ,விடிய விடிய நடித்துக் கொடுத்து காலையில் வீடு திரும்பினார்.அவர் தான் -கே.ஏ.தங்கவேலு. பள்ளத்து பாப்பா என்று அழைக்கப்பட்ட கோபி சந்தா புதுக்கோட்டையில் பால்ராஜ் என்பவர் நடத்திய விதியின் விசித்தரம் என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.அந்த நாடகத்ழதப் பார்த்த பி.ஏ.குமார் எனபவர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தேவிகாவை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டு அதில் கோபி சாந்தாவுக்கும் நடிக்க வாய்ப்பளித்தார். அன்றைய கோபி சாந்தா தான் இன்றைய மனோரமா. சுருளிராஜன் சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார்.டி.என்.பாலு இயக்கிய சில நாடகங்களில் அவர் நடித்து வந்தார்.சினிமாவில் அறிமுகமான பிறக வரிசையாக படங்களில் நடித்து வந்த சுருளிராஜனுக்கு 1971-ம் ஆண்டில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி வெளிவந்த ஆதிபராசக்தி என்ற படம் திருப்புமுனையாக அமைந்தது.