சுதந்திரப் போரில் தமிழ் சினிமா

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா
அறந்தை நாராயணன் அவர்கள் எழுதியது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் தமிழ் சினிமா ஆற்றிய பங்கு குறித்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் அனைத்தும் இந்நூலில் வெளிக் கொணரப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில், தேசிய விடுதலை இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளான - தீண்டாமை எதிர்ப்பு. மதுவிலக்கு, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, வரதட்சணை எதிர்ப்பு , கலப்புத் திருமண ஆதரவு - போன்ற இலட்சியங்களுக்கும் தமிழ் சினிமா பெரும் பணி புரிந்துள்ளது. அந்த விபரங்களும் முறையாக, முழுமையாக இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா தோன்றுவதற்கு முன்பும், தோன்றிய பின்னரும் நாடகக் கலைஞர்கள் சுதந்திரப் போருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும், கட்டமைப்புக் கருதி சுருக்கமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது ஆம். நாஜிஸத்தையும் பாசிஸத்தையும் எதிர்த்து தமிழ் சினிமாவும் தனது காணிக்கையைப் பதிய வைத்தது அந்தச் செய்திகளும் முழுமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.