சுகுமாரன் நேர்காணல்கள்

Price:
290.00
To order this product by phone : 73 73 73 77 42
சுகுமாரன் நேர்காணல்கள்
படைப்பாளனாகக் கவிதையிலும் புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்ல இயலாதவற்றையும் சொல்லத் தவறியவற்றையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவே நேர்காணல்களைக் காண்கிறேன். முதன்மையாக இலக்கியத்தையும் அதன் உடன் நிகழ்வாகப் பிற துறைகளையும் பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கே நேர்முகங்களில் முயன்றிருக்கிறேன். எனது பார்வைகள், அக்கறைகள், சார்புகள், விருப்பங்கள், மறுப்புகள், விழுமியங்கள், நிலைப்பாடுகள் ஆகியவற்றை இந்த நேர்காணல்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பது ஆசை. வெளிப்படுத்துகின்றன என்பது நம்பிக்கை.
- முன்னுரையில் சுகுமாரன்