சிரிப்புக் கதைகள் (அல்லயன்ஸ்)

சிரிப்புக் கதைகள் (அல்லயன்ஸ்)
உங்களுக்குச் சின்ன அண்ணாமலையைத் தெரியுமா? தெரியாதா ? தெரிந்திருக்க வேண்டுமே! அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1942-ல் அவருக்காக 20.000 பேர் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்த் திருக்கிறார்கள். காந்திஜிக்கு நன்கு அறிமுக மானவர். சிலம்புச் செல்வர் ம.பொ.சி.-யின் நெருங்கிய தோழர். ராஜாஜியின் தொண்டர். காமராஜ். கல்கி ஆகியோரின் பக்தர். சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.
இவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவருடைய தலைக்கு ஆங்கில அரசாங்கம் விலை வைத்தது. ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை. போலீசாரின் துப்பாக்கிமுன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தே மாதரம்' என்று முழங்கியவர்.
இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பட்டம், பதவியில் ஆசையில்லாத தியாகி.
அண்ணாமலை என்ற இவர் பெயருக்கு முன்னால். சின்ன என்று வார்த்தையைச் சேர்த்து, அவர் பெயரை மாற்றியவர் 'கல்கி'.
இவர் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர், நகைச்சுவை மன்னன், சிறந்த பேச்சாளர், பதிப்பக உரிமையாளர், திரைப்பட தயாரிப்பாளர் என்று பண்முகங்களைக் கொண்ட சாதனையாளர்.