சொல்றேண்ணே சொல்றேன்
சொல்றேண்ணே சொல்றேன்
குழந்தைகளின் செல்ல அங்கிளாகவும்... குடும்பத்தினர் அனைவருக்கும் குபீர் சிரிப்பு நாயகனாகவும்... குறுகிய காலத்தில் இமான் அண்ணாச்சி பெற்றிருக்கும் புகழ், அபரிமிதமானது. ‘‘நான் அடுத்த ஆள கிண்டல் பண்ணி சிரிக்க வைக்கிறதில்லண்ணே... எல்லாரும் என்னைய கிண்டல் பண்ணி சிரிச்சிக்கிடட்டும்னு விட்டுப்புடறேன்’’ என்கிற அண்ணாச்சியின் அணுகுமுறை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜெயிக்கிறது. அதே அணுகுமுறைதான் இந்தப் புத்தகம் நெடுகிலும் நம்மை சிரிக்க வைக்கிறது... சிந்திக்கவும்தான்!
எந்த இடத்திலும் ‘நான் பெரியவன்’ எனக் காட்டி வாசகனை அசெளகரியப்படுத்தாமல், மிக எளிய பேச்சு நடையில், அரிதான விஷயங்களை இங்கே பேசியிருக்கிறார் இமான் அண்ணாச்சி. தெரு நாய்க்கு ஏதோ ஒரு மனிதன் மீது மட்டும் வருகிற இனம் புரியாத வெறுப்பை இவர் எதிர்கொண்டிருக்கிறார். கீரை விற்பதிலும் தக்காளி வியாபாரத்திலும் உள்ள விநோதமான நெருக்கடிகளைக் கடந்து வந்திருக்கிறார். சினிமாக்களில் வீரமும் கம்பீரமுமாக வரும் போலீஸ் கதாபாத்திரங்களைத்தான் நமக்குத் தெரியும். அந்த கனமான உடைக்குள்ளும் காலுக்குப் பொருந்தாத ஷூக்களுக்குள்ளும் புழுங்கித் தவித்த அனுபவம் இவரிடம் இருக்கிறது. இவை அனைத்தையும் நம்மிடையே போட்டு உடைத்து நம்மை சிரிப்பில் மூழ்கச் செய்கிறார் இமான் அண்ணாச்சி.
எழுத்து ஊடகத்தில் இமான் அண்ணாச்சியின் முதல் முயற்சிதான் ‘குங்குமம்’ இதழில் வந்த ‘சொல்றேண்ணே சொல்றேன்’ தொடர். ‘இவர் சொல்லும் ஜோக்கில் சிரிப்பில்லை... எந்த ஜோக்கையும் இவர் சொல்லும் விதத்தில்தான் சிரிப்பு வருகிறது. இவரால் எழுத்தில் சிரிக்க வைக்க முடியுமா?’ என ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது உண்மைதான். ஆனால், அந்த சந்தேகங்களைத் தகர்த்து சாதித்துக் காட்டியது ‘சொல்றேண்ணே சொல்றேன்’ தொடர். அதுவே புத்தக வடிவம் பெற்றுள்ளது.
சொல்றேண்ணே சொல்றேன் - Product Reviews
No reviews available