சொல் வழக்குக் கையேடு
சொல் வழக்குக் கையேடு
மொழி அறக்கட்டளை உருவாக்கிய இச்சொல் வழக்குக் கையேடு மொழியியல் சிந்தனையுடன், அறிஞர்களால் உருவாக்கப்பட்ட முதல் கையேடு. ஒரு மொழிக்கு அகராதி போன்ற அடிப்படை நூல்களின் பயனை ஒத்ததே சொல் வழக்குகளைப் பற்றி வெளியாகும் தனி நூலின் பயனும் என்று கூற வேண்டும். மொழியைப் பற்றிய முழுமையான அறிவிற்கு ஒவ்வொரு அடிப்படை நூலும் ஒரு வகையில் உதவுகிறது.
இச்சிறு கையேட்டைப் பயன்படுத்துவோர் அல்லது படிப்பவர்கள் தாங்கள் கையாளும் சொற்களின் கூர்மையை உணர்வார்கள்: சொற்கள் கூர்மை அடைய அடையக் கருத்தை வெளிப்படுத்துவதும் கூர்மை பெறுகிறது. சில சொற்களுக்குத் தரப்பட்டிருக்கும் செய்திகள் புதிய இலக்கணம் எழுத விரும்பும் ஆய்வாளருக்குப் பயன்படக் கூடும். சிலச் சொற்களின் தகவல்களைப் பொதுமைப்படுத்தினால் ஒரு இலக்கண விதி பிறக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் விதி விரிவுபடுத்தப்படலாம். இலக்கணம் மட்டுமல்லாமல் பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் தமிழில் எழுதுவோருக்குப் பயன்படும்.
சொல் வழக்குக் கையேடு - Product Reviews
No reviews available