செகண்டு ஒப்பிணியன்
செகண்டு ஒப்பிணியன்
பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ‘கணேஷ் மருத்துவமனை’யைக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். (1975 - 1981) பட்டம் பெற்றவர். நோயாளிகளுக்குச் செய்யும் மருத்துவச் சேவையுடன், மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் அதிகமாக தொண்டாற்றி வருகிறார். ஆங்கில மருத்துவச் செய்திகளைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக எழுதுவது இவருக்குரிய தனிச் சிறப்பு. இதுவரை 40 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.
தமிழில் வெளிவரும் முன்னோடி நாளிதழ்களிலும், பல்வேறு வார, மாத இதழ்களிலும் உடல்நலன் சார்ந்த மருத்துவக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவருடைய இடைவிடாத மருத்துவ அறிவியல் தமிழ்ப்பணிக்காக, மத்திய அரசின் உயரிய விருதான ‘தேசிய அறிவியல் விருது’; சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேராய விருது’; சென்னை, முத்து பார்மசியின் ‘சாதனையாளர் விருது’; கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ‘மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’; திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது; நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விருது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளார். தமிழ் நாடு பாடநூல் கழகத்தின் நூலாசிரியராகவும் உள்ளார்.
நூல் குறிப்பு:
வணிகத்துறையாக மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள் மனிதர்களை தாக்கிக்கொண்டிருக்கின்றன. எப்படி குணமாவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களை குழப்புவதற்கு என்றே அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம்... அது இது என ஒவ்வொரு மருத்துவப் பிரிவும் ஒவ்வொரு மருந்தை சிபாரிசு செய்கின்றன. ஒவ்வொரு நோய் குறித்தும் ஒவ்வொரு தகவலை சொல்கின்றன. இவற்றில் எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கிறார்கள். இந்த அறியாமையைத்தான் இந்நூல் போக்குகிறது.
செகண்டு ஒப்பிணியன் - Product Reviews
No reviews available