குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு

Author: டாக்டர் ஜி.தண்டபாணி டாக்டர் பெரியகருப்பன்
Category: உடல் நலம்
Available - Shipped in 5-6 business days
குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வதில்லையா? அந்த அழகுக் குழந்தையின் முகத்துக்கு அழகு சேர்ப்பது முத்துப் போன்ற பற்கள்தான். அதற்கு பற்கள் முறையாகப் பராமரிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் அந்த வகையில்
குழந்தைகளின் பற்களைப் பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளின் பற்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
மருத்துவச் சிகிச்சையின்போது மருத்துவரோடு குழந்தையை ஒத்துழைக்கவைப்பது எப்படி?
சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரமுடியாத குழந்தைகளைச் சமாளித்து சிகிச்சை அளிப்பது எப்படி?
குழந்தைகளின் பல் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கான அறிவுரைகள் என்னென்ன?
என்பது உள்ளிட்ட குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு குறித்து நிறைய விஷயங்கள் இந்த புத்தகத்தில் அலசி ஆராயப்பட்டுள்ளன. குழந்தையின் பன்னிரொண்டு வயதுக்குள் மேற்கொள்ளப்படும் பல் பாதுகாப்புதான், ஆயுள் வரைக்கும் நீடித்து நிற்கும் என்று அறிவுறுத்தும் இந்தப் புத்தகம் உங்களுடன் இருக்கும் பல் மருத்துவர்.