சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
முத்தமிழ் என அழைக்கப்படும் அழகுத்தமிழில் இயல் இசை நாடகம் என மூன்றும் முறைப்படி அமைந்து இனிமை பயப்பதை உலகம் நன்கறியும். அவற்றுள் இசைதமிழ் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து பிறமொழிக் கலப்பால் சிதைக்கப்பட்டும் படப்பட்டு வந்துள்ளது இசை நுணுக்கம் என்ற நூல் இருந்து மறைந்ததாகக் கூறுவர். இசைத்தமிழ் பாமர மக்களை எளிதில் கவரும் என்பதால் அது காலத்தை அடிப்படையாகக் கொண்டு மணிப்பிரவான நடையில் பெருகியது. தேவாரப்பண்கள் போன்ற தெய்விகப் பண்கள் சிதைக்கப்பட்டு கீர்த்தனைகள் என்ற பதிய வடிவம் தோன்றியது அவை வடமொழி பெருவழக்காய்க் கலந்திருந்த சூழலில் கலப்பு நடையில் அமைந்தன. அவ்வகையில் அமைந்தவைதாம் இராமநாடகக் தீர்த்தனைகள், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்பவை - சிறப்பானவை. பின்னாளில் மாயூாம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்பவர் எழுதியது சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் என்னும் இந்த நூல்
இந்த நூல் 80 இாகங்களில் பாடப்பெற்றுள்ள 192 பாடல்களைக் கொண்டுள்ளது. பாடல்கள் இயைபுத்தொடை பொருந்த சிந்து நடையில் மக்கள் வழங்காது மிகுந்ததாக அமைத்துள்ளன.