சர்க்கரை நோயில் இருந்து விடுதலை (செலவின்றி சிறப்பான வாழ்வு)
சர்க்கரை நோயில் இருந்து விடுதலை (செலவின்றி சிறப்பான வாழ்வு)
ஒரு முறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கும் கொடூர நோயாக நீரிழிவு நோய் புரிந்துகொள்ளப்படுகிறது. அது மிகவும் தவறு. நாம் உட்கொள்ளும் தவறான உணவுமுறைகளால் உடலுக்குள் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவே நீரிழிவு நோய் உண்டாகிறது என்பதை சர்க்கரைநோயுள்ள பலரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே முற்றிலும் உண்மை. இந்நோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு- இன்று இதற்கான மருத்துவமே பிரதானமாக பலராலும் மேற்கொள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். ஆங்கில மருத்துவமுறை மட்டுமல்லாது ஆயுர்வேதம்,சித்தா,யுனானிஈஅக்குபஞ்சர் என பல மருத்துவமுறைகளும் இந்த நோயை குணப்படுத்தப் போராடுகின்றன.
சரி; சர்க்கரை நோய் அவ்வளவு கொடியதா? ஒருவகையில் "ஆம்" என்று சொல்லலாம். இன்னொரு வகையில் 'இல்லவே இல்லை' எனலாம். அந்த இன்னொரு வகையை விளக்குவதுதான் இந்த நூல்.
சர்க்கரை நோயில் இருந்து விடுதலை (செலவின்றி சிறப்பான வாழ்வு) - Product Reviews
No reviews available