சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்? நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா? நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா? நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி? கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை? உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்? - இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.