ருடால்ஃப் கில்யானி

ருடால்ஃப் கில்யானி
செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது அமெரிக்கா மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்தும் போனது. யாரும் எதுவும் செய்வதறியாது சுருண்டு கிடந்தபோது, மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்டு துள்ளி எழுந்த முதல் நபர் நியூயார்க் நகர மேயர் ருடால்ஃப் கில்யானி. இது முடங்கிக்கிடக்கும் நேரம் அல்ல, செயலாற்றவேண்டிய தருணம் என்று அதிகாரிகளைத் தட்டியெழுப்பினார். மீட்புப்பணிகள் பேய் வேகத்தில் நடந்தன. குவிந்த வேலைகள் ஒருபுறம், குடைந்தெடுக்கும் மீடியா ஒரு புறம், கதிகலங்கி நின்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டிய மாபெரும் பொறுப்பு இன்னொரு புறம். அவர் ஓயவே இல்லை. அதனால்தான் மிக விரைவில் நியூயார்க் நகரம் விழித்துக்கொண்டது. அமெரிக்கா சுதாரித்துக்கொண்டது. சிக்கலான சூழலில் சிறப்பாகச் செயலாற்றுவது மாபெரும் கலை. அதுவும் தலைமைப் பொறுப்பில் இருப்போருக்கு இது சவாலான கலை. அந்தக் கலையில் கரை கண்டவர் கில்யானி. தலைமைப்பண்புகள் (Leadership Qualities) குறித்த கில்யானியின் கருத்துகள் உலகமெங்கும் நிர்வாகவியல் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெகு பிரபலம். கில்யானியே ஏகப்பட்ட வகுப்புகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்