ரமாவும் உமாவும் (க்ரியா)
ரமாவும் உமாவும் (க்ரியா)
புதிதாகச் சேர்க்கப்பட்ட நாடகத்துடன்
இப்போது போய் யாராவது ஒரு யதார்த்த இலக்கியக் கதையை எழுதுவார்களா? எழுதினால், காறித்துப்புவார்கள். உங்களுக்குத் தெரியாது. தொண்ணூறுகளுக்குப் பின் இலக்கிய நிலவரமே மாறிவிட்டது. தலித் எழுத்தாளர்கள் கதைகள் எழுத ஆரம்பித்த பின் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க, நடுத்தர சாதி எழுத்தாளர்களின் சாயம் முற்றிலுமாக வெளுத்துவிட்டது. இது ஒரு நெருக்கடியான நேரம். 60, 70களில்கூட இந்திய இலக்கியத்திற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, இந்தியப் பாத்திரங்கள் ஏதோ இரண்டாம் உலகப் போரில் வதைபட்டுத் திரும்பியவர்கள்போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு, இருளிலும், மெளனத்திலும் உட்கார்த்து புலம்பிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை, நாங்கள் ஐரோப்பாவிலிருந்து கரீபியனுக்கு ஏற்கனவே நகரத் தொடங்கிவிட்டிருந்தோம். அதோடு, வாராது வந்த மாமணிபோல், மார்க்குவேஸும் அப்போது வந்து சேர்ந்தார். அதன் பின்தாள் நாங்கள் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது. மாயம், மந்திரம், என்று ஐரூராகக் களத்தில் இறங்கிவிட்டோம். அப்போது எங்கள் பாத்திரங்கள் ராமேஸ்வரம் கடற்கரையில் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் சிந்தித்துக்கொண்டு அலைந்ததையும்கூட மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். யார் கண்பட்டதோ? இப்போது அதுவும் அலுத்துப்போய்விட்டது. நாங்கள் என்னதான் செய்வது? மறுபடியும் நெருக்கடிதான். இந்த உலகமயமாக்கல் வேறு பாடாய்ப் படுத்துகிறது.
ரமாவும் உமாவும் (க்ரியா) - Product Reviews
No reviews available