ராமானுஜ காவியம் (உரைநடைக் கவிதை)
துவைதம், அத்துவைதம், இவை இரண்டையும் இறுகக்கட்டி ராமானுஜர் வழங்கிய தரிசனம்தான் விசிட்டாத்துவைதம்,
விசித்தல் என்றால் கட்டுதல், இவ் அரிய பணியின் மூலம் அசித்திலும் இறைவன் உறைகிறான் என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னவர் எதிராஜர்,
இதையொட்டிதான் கம்பன் தனது இராமாவதாரத்தின் இடையே செருகியுள்ள இரணியன் வதைப் படலத்தில் - ‘இல்லை'யென்று இரணியன் சொன்ன சொல்லிலும், இறைவன் உளன் என்று பிரகலாதனைப் பேச வைக்கிறான்.
அவரது புண்ணிய வரலாற்றைப் புதிய உரை நடைக் கவிதையாய்ப் புனைந்தது என் முன்னைத்தவம்.
வையமிசை உள்ள உயிரெலாம் வீடுபெற வேண்டும் எனும் பெருங்கருணை ராமானுஜரின் இதயத்தில் இடையறாது சுரந்தது.
ஸ்ரீராமானுஜர் என் குலகுரு.
ராமானுஜ காவியம் (உரைநடைக் கவிதை) - Product Reviews
No reviews available