புதிய கையெழுத்து

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
புதிய கையெழுத்து
புன்சிரிப்புடன் ராமனைக்
கொல்கிறான் சம்புகன்
கோடரியால்
துரோணரின் கட்டைவிரலை
வெட்டியெறிகிறான் ஏகலைவன்
தன் சிறிய பாதத்தால்
வாமனனை பாதாள உலகத்திற்கு
தள்ளுகிறான் மகாபலி
ஊசி குத்தப்பட்ட கண்களுடன்
வெட்டப்பட்ட நாக்குகளுடன்
ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட காதுகளுடன்
இடுகாட்டில் புரண்டு கொண்டிருக்கிறான்
மனு
காலத்தின் கொலைவாளின்மீது
நின்று காஜித்தபடி
சங்கரரின்மீது
நான்கு வெறி நாய்களை
எவிவிடுகிறான் சண்டாளன்
இதுதான்
நடப்பு வரலாறு
சண்டாள வரலாறு.