புண்ணியம் தேடி..

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
புண்ணியம் தேடி..
இன்றும் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு - விஸ்வநாதன் என்றும் விசாலாட்சி என்றும் பெயரிட்டு மகிழ்கிறோம். அது - காசிக்குத் தமிழகம் தரும் மரியாதை. தமிழகம் மட்டுமென்ன! தரணியே தலைதாழ்த்தி வணங்கும் புண்ணிய பூமி அது. என்றும் மாறா இளம் துள்ளலோடு ஓடும் கங்கை நதி... பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் தாழங்குடையின்கீழ் அமர்ந்து கர்மா செய்துவைக்கும் காட்சி... நம்ம ஊர் திருப்பனந்தாள் மடத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் - கங்கை பொங்கும் அழகிய கேதார்நாத் துறை, முகலாயப் படையெடுப்பு, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு... எதனாலும் தன் தனித்தன்மை கெடாமல் புனிதப் பொக்கிஷமாக காட்சி தரும் காசி. காசிக்குப் போனால் கிடைக்கும் புண்ணியம்! காசியின் முழுமையான வரலாறை விவரிக்கும் இந்நூலை வாசித்தாலும் கிடைக்கும்.