உமையாள் அருள் வீழ்ச்சி

உமையாள் அருள் வீழ்ச்சி
பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு மற்றும் அவை மனித தேகத்தில் செயல்படும் விதம் மற்றும் பிரபஞ்ச இயக்கத்திற்கும், மனித உடம்பிற்கும் (அண்டம்-பிண்டம்) உள்ள நெருங்கிய தொடர்புகள், மனித சுவாசத்தின் இரகசியம், யோகத்தில் அடைய வேண்டிய ‘சுவாச ஓட்டத்திந் பல்வேறு நிலைகள்’ மற்றும் உடலில் அதன் ஓருங்கிணைந்த செயல் முறைகள், பல்வேறு உயரினங்களையும் ‘நிறங்களின் வர்ண ஜாலத்தின்’ மூலம் அடையாளப் படுத்தி கொள்ளும் இயற்கை, மனிதனின் மேனியில் அடங்கியுள்ள சொரூபலக்ஷ்னம் என்ற ஏழு வகையான உணர்வுகளின் நிலைகள், கண், காது சமன்வயப்படுத்தும் ‘பிரம்ம விருத்தியின்’ உயர் நிலைகள். ‘ஜீவ பிரம்மத்தின் ஐக்கிய நிலைகள்’ மற்றும் சர்வ பிரஞ்ச இயக்கத்திற்கே காரணமாமக திகழும் அறிவு பூர்வமான ‘பீஜாட்சரங்கள்’ என இவை யாவும் முதன் முறையாக விளக்கமான முறையில் இந்நூலில் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
மனிதனிடம் “தெய்வீகம்” குடிகொண்டுள்ள இடம் அவனுடைய ‘பேச்சு’ என அலசும் இந்நூல். பேச்சில் அடங்கியுள்ள பல நிலைகளை ஆராய்ந்து சொல்கிறது. மெய்ஞானத்துடன் உணர்வு பூர்வமாக இணைந்திருக்கும் இயற்கை, நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளும் விடும் அறைகூவல்கள் இவற்றையும் அலசுகிறது இந்நூல். யோகத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு அமரகவியின் நூல்கள் ஒரு தீர்வு கண்’டுள்ளது இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். ‘சக்தினி பாதம்’ என்ற நூலின் தொடர்ச்சியே ‘உடையான் அருள் வீழ்ச்சி’ புத்தகமாகும்.