பெட்ரோலின் கதை
பெட்ரோலின் கதை
பெட்ரோலியத்துக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தை அளித்த நிகழ்ச்சி எது? என்று கேட்டால். முதலாம் உலகப் போரைத்தான் குறிப்பிட வேண்டும். மனிதர்கள் சவாரி செய்ய மட்டுமல்லஇ போரில். ஈடுபட்டவர்களுக்குத் தேவையான உணவு. உடை ஆகியவற்றைக் கொண்டு செல்லவும்கூட போக்குவரத்து அவசியம். அதனால். அப்போது குதிரைகளுக:கு மிகவும் கிராக்கி ஏற்பட்டது. மூன்று ராணுவ வீரர்களுக்கு ஒரு குதிரை என்று கணக்குப் போட்டார்கள். அதேசமயம்இ ஒரு குதிரைக்குத் தேவைப்படும் உணவு என்பது. ஒரு ராணுவ வீரரின் உணவைவிடப் பத்து மடங்கு அதிகம்! இந்நிலையில். மோட்டார் வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததது. பெட்ரோலும் டீசலும் போரின் போக்கையே மாற்றின. போர்க் கப்பல்களும்இ போர் விமானங்களும் இதற்கு முன் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாத அதிரடித் தாக்குதல்களை நடைமுறைப்படுத்தின.நிலக்காரியால் ஓடிக்கொண்டு இருந்த தனது கப்பல்களைஇ பெட்ரோலால் இயங்கும்படி மாற்றியமைத்தது பீட்டன். எதிரணியில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜெர்மனி தனது சாகசத்தைக் காட்ட. ஒரு கட்டத்தில். பிரிட்டனின் தோல்வி தெரியத் தொடங்கியது. போதாக் குறைக்கு போர்க் கப்பல்களுக்காக பெட்ரோலைச் சுமந்து சென்ற கப்பல்களாகப் பார்த்து இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தாக்கத் தொடங்கின. ஆக. பேரழிவுச் செயல்களில் மறைமுகமாகப் பெரும்பங்கு வகித்ததது பெட்ரோல்.
பெட்ரோலின் கதை - Product Reviews
No reviews available