க[ராபர்ட்டோ கலாஸ்ஸோ]

Price:
450.00
To order this product by phone : 73 73 73 77 42
க[ராபர்ட்டோ கலாஸ்ஸோ]
தமிழில் :ஆனந்த் , ரவி.
காலச்சுவடு நவீன உலக கிளாசிக் வரிசை. இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கபட்ட வேண்டிய நூல் மட்டுமல்ல "க" இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்ச்சி காட்டியிருக்கிறது.
பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்களைக் கடவுளருக்கும் மானிடருக்கும் பொதுவானதாகி அவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை இந்த நூல் இல்லாததாக்கிவிட்டிருக்கிறது பிரக்ஞையின் தோற்றமும் மலர்ச்சியும் விகாசமும் அவதானிக்கப்பட்டிருக்கும் நுட்பமும் ஆழமும் விரிவும் ஆச்சரியம் கொள்ளவைக்கிறது.
இலக்கியம் என்னும் அளவில் மட்டுமல்லாது பிரக்ஞை சார்ந்த விசாரணை என்னும் தளத்திலும் இந்த நூலின் பங்கு அதிமுக்கியமானது.