இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு

0 reviews  

Author: அருந்ததி ராய்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு

நிறுவனமயமாகிவிட்ட இடதுசாரிக் கட்சிகளும் பரந்த மனப்பாங்கினராக அறியப்படும் அறிவாளிகளும் மாவோயிஸ்டுகள் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். தம்மைப் பற்றித் தங்களுக்குள்ளாகவே உள்ள குடைச்சலும் இந்திய அரசு மீது அவர்களுக்குள்ள இனம்புரியாத புதிரான வாஞ்சையுமே இந்தச் சினத்தின் ஆழத்தில் புதைந்துள்ளன. உண்மையான புரட்சிக்கான வாய்ப்பு அவர்களை எதிர்நோக்கியுள்ள இக்கணத்தில் அவர்கள் அதைக் காண மறுத்துத் தம் கண்களை மூடிக் கொள்வதைப் போலத் தோன்றுகிறது. தம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதற்கான காரணங்களை அவர்கள் தேடிப்பிடிக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நர்மதா பச்சாவ் அந்தோலன் முதலிய அமைப்புகளுக்கு ஒருபோதும் தம் ஆதரவைத் தெரிவிக்காதவர்களும், இந்நாட்டில் அமைதி வழியில் நடக்கும் பல மக்கள் இயக்கங்களில் எப்போதும் தம்மை இணைத்துக்கொள்ளாதவர்களும் அவர்கள் அரசியல் கட்சியினராகட்டும், தனி மனிதர்களாட்டும் இப்போது திடுமென முன்வந்து வன்முறையற்ற போராட்டங்கள், காந்தி வழியிலான அறவழிப் போராட்டங்கள் முதலியவற்றின் புகழ் பாடத் தொடங்கிவிட்டனர்

இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு - Product Reviews


No reviews available