மைசூர் மகாராஜா

மைசூர் மகாராஜா
தூக்கத்தில் ஒருவர் கண்ட கனவுக்க ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைக்கும் சக்தி இருக்குமா?உள்ளம் கொதகொதிக்க ஒரு பெண்மணி என்றோ விட்ட சாபம் இன்றுவரை ராஜ பரம்பரையைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மையா?ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூரை வாழ்விக்க வந்த ரட்சகர்களா? அல்லது உடையார் பரம்பரையினரை ஒடுக்கி வைக்க வந்த வில்லன்களா?உடையார் பரம்பரை ஆட்சிக்கு வந்த புரான கதை முதல் மைசூரின் பாரம்பரிய அடையாளமாக மிஞ்சிக்கிடக்கும் தசரா உற்சவத்தின் இன்றைய வரலாறு வரை அத்தனையும் இந்தப் புத்தகத்தில் உண்டு.விஜயரகரப் பேரரசர்கள் முதல் விஸ்வேஸ் வரய்யா வரை புத்தகத்தில் வாழும் சரித்திர நாயகர்கள் அநேகம்.எத்தனையோ சூழ்ச்சிகள் எவ்வளவோ வீழ்ச்சிகள் அத்தனையையும் கடந்து 5 1/2 ஆண்டுகள் நூற்றாண்டுகாலம் உடையார்கள் மைசூரை ஆட்சி செய்த மொத்த சரித்திரத்தையும் உணரும் போது நமக்குள் தோன்றும் ஒரே உணர்வு பிரமிப்பு! காதல், மோதல்,வீரம ,கோபம், சோகம், துவேஷம், இன்பம் அனைத்து ரசங்களோடும் மைசூர் அரண்மனைக்குள் வாழும் உணர்வினைத் தருகிறார் நூலாசிரியர்.மைசூரைஆண்ட மகாராஜாக்கள் குறித்து தமிழி்ல் முதன்மையான புத்தகம்