பிறப்பொக்கும்
மனிதர்களின் பார்வையிலிருந்து சிறுதெய்வங்களைத் தரிசனம் செய்யும் கலைப்பார்வையைத் திசை திருப்புகிறது இந்நாவல். கிராமிய மணத்தில் உயிர்த்திருக்கும் அச்சிறுதெய்வத்தின் பார்வையில் மானுட தரிசனம் நிகழும் கணங்கள் இப்படைப்பின் வழியாக நம்மைச் சேர்கின்றன. நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டியது, மதிப்பில்லா வாழ்க்கையென்று இங்கே எதுவும் இல்லை. எளிய மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை அங்கலாய்ப்புகளின் வழியே, தம் தெய்வத்தின் கருணைப் பாத்திரங்களாக உயர்நிலை எய்துகிறார்கள். வாழ்க்கையைச் சாரமாக உணர்கிறோம். கண்டறியாத நிலமும் கேட்டறியாத மொழியும் எனத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் நல்லழகை நம் மனத்துக்குள் இலகுவாகக் கொண்டு செலுத்துகிறது, ‘பிறப்பொக்கும்’.
பிறப்பொக்கும் - Product Reviews
No reviews available