பெண்ணின் மறுபக்கம்

பெண்ணின் மறுபக்கம்
டாகடர் என்.ஷாலினி அவர்கள் எழுதியது. "போயும் போயும் குரங்கிலிருந்து மனதினா?இது என்ன அபாண்டம் ...!" என்று எல்லோரும் வாயைப் பிளந்து ,திறந்து மூடுவதற்குள் டார்வின் மற்றொரு குண்டைத் தூக்கி வீசினார் பாருங்கள்..."எல்லோரும் நினைப்பது போல ஆண் ஒன்றும் ஒசத்தி இல்லை,பெண்தான் ஆணை விட ஒசத்தி!"."என்ன சொன்னாய்...?"என்று டார்வின் மீது எல்லோரும் பாய்ந்தே விட்டார்கள்."கண்ணைத் திறந்து இந்த உலகத்தை நனறாக பார்...உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிளும் ஆண்தான் பெண்ணைவிட அழகாக ,வனப்பாக இருக்கிறது.பெண் மயிலை விட ஆண்மயில் தான் அழகு.பெண்சிங்கத்தை விட ஆண் சிங்கம் தான் வலிமையானது .சரிதானே?" என்று எல்லோரும் டார்வியிம் புத்தி புகட்ட டார்வி கொஞ்சம் கூட பதறாமல் "ஆம் .ஆண் மயில் தான் அழகு ,ஆண் சிங்கம் தான் அழகு.இது ஏன் என்று யோசித்தீர்களா...?" என்று கேட்டார் டார்வின்.இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க நேரம் எங்கே?... மற்ற எல்லா உயிர்கள் போலவே ,மனித இனத்திலும் பெண்தான் பிரதானம்.ஆரம்ப காலத்தில் அவள் தான் மனித கூட்டங்களுக்கெல்லாம் தலைவி .அவள் தான் கடவுள்.அவள் தான் அரசி!அப்புறம் எப்படி அவள் நிலைமை மாறியது.இவ்வளவு அந்தஸ்தில் இருந்தவள் எப்படி இத்தனை தலைகீழ் நிலைமைக்கு மாறினாள்? எல்லாம் மரபணுக்குள் நடத்தும் பாலியல் போலினால்தான்! பாலியில் போரா! என்று ஆச்சரிய தொனியில் கேட்கிறீர்களா...ஆம் இது தான் பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் உலகின் மிக நீளமான போர்!