பழந்தமிழர் கணக்கு நீட்டலளவை
பழந்தமிழர் கணக்கு நீட்டலளவை
கொடுமுடி நம்பன்
அஞ்சலட்டையில் வந்த செய்தி இளைஞர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததத.மாதந்தோறும் நடைபெற்ற வரும் கூட்டங்கள் பற்றி தகவல் தெரிவிக்கக் கேட்டிருந்தது. எழுதியவர் பொதுப்பணித்துறையில் உயர் அலுவலர். அப்படியே கலந்து கொண்டதோடு அரிய ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தவும் ஏற்பாடுகளைச் செய்து தந்தார் கொடுமுடி சண்முகன் என்னும் அவ்வறிஞர். செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு தொல்லியல் சார்ந்த அரும்பொருட்களைப் பொதுமக்கள் பேணும் வகையில் காக்கவும் காட்சிப்படுத்தவும் செய்தார். அவரின் ஆய்வுகள் பண்டைய வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்களில் தொடங்கி அரிய கல்வெட்டுகள் இலக்கியங்கள் என விரிந்தது. அவர் கண்டறிந்தவற்றை நூல்களாகவும் பதிப்பித்தார். தம் துறைசார்ந்த அறிவைக் கொண்டு எழுதப்பட்ட அளக்கையியலும், பொறியியலன் வரைவியல் நூல்களே அவற்றுக்குச் சான்று. தொல்காப்பியத்திற்கு எளிய எரை, தமிழ் எழத்துச் சீர்திருத்தம் எனப் பலவாறாக விரிந்த உழைப்பு அவருடையது. இவற்றுக்கு நடுவில் தேனோலை என்னும் ஆய்விதழையும் நடத்தியது வியப்பு. சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,கடலூர் ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் உருவாகி ஆய்வுகள் பெருகச் செய்தவர், அதனால்தான் விழுப்புரம் மாவட்டப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் திறந்த வெளிக் காட்சிக்கூடங்களாக மாறின, எண்ணிறைந்த பணிகளில் நின்ற நிலைபெற்றவை அவை. அளக்கையியல் பாடப்புத்தகமாக எழுதப்பட்ட நிலையில் பண்டைய பாசனப் பொறியியல் என்னும் சிறுநூல் இலக்கியச் சான்றாதாரங்களை மட்டுமே மிகுதியாகக் கோண்டு சாமான்யன் படித்து மகிழக் கூடிய எளிய அறிமுக நூலாக வந்தது. அச்சுறுத்தும் கணித வரைபடங்களின்றி விளக்கங்களின்றி வந்த அந்நூல் இலக்கிய வழியிலானது. அதற்கு அவரின் பேரார்வமே அன்றி வேறுகாரணமில்லை எனக் கொள்ள முடியும். துறைசார்ந்த கற்றலுக்கான நூல்களாக தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட அளக்கையியரும் பொறியியலின் வரைவியல் என்னும் இருநால்கள் இருப்பது அவரது துறைசார் புலமையைக் காட்டுவதாகலாம். அன்றி அவர் பதித்த வழிகாட்டிப்பலகைகள் அரசு அலுவலர் ஒருவரின் வரலாற்றின் மீதான தீராக் காதலைக் காட்டுவதாக நிற்கின்றன்.
- சுகவன முருகன்
பழந்தமிழர் கணக்கு நீட்டலளவை - Product Reviews
No reviews available