பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்

பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்
இயற்கைத் தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள் எனலாம். மரம், செடி, கொடிகள் அனைத்தும் தாவரங்களே! மரங்கள் இப்பூமியில் தோன்றி 30 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என தாவர வல்லுநர்கள் கருதுகின்றனர். மரங்கள் மழை, காற்று, காய் கனிகள் மட்டும் நமக்குத் தாவில்லை. மருந்துணவுகளையும் தருகின்றன. மரங்களின் வேர்களும், பட்டைகளும் தரும் மருத்துவப் பலன்கள் தான் மனிதரை வாழ வைக்கின்றன.
'மாதா ஊட்டாத சோறில்லை மருந்தை தராத மரமில்லை' எனக் கூறுமளவு மரங்கள் மருந்தாகி நமது ஆயுள் காக்கின்றன.
பூவரசன்பட்டையை மென்று சாறு விழுங்க, சர்க்கரை நோய் தீரும். நாவல் பட்டை பெரும்பாடு போக்கும். விளாம்பட்டை நூறாண்டு வாழ வைக்கும். அத்திப்பட்டை வெள்ளைபடுதலை போக்கும். அரசம் பட்டை மலடு நீக்கும். ஆயில்பட்டை முப்பிணி போக்கும். ஆலம் பட்டை ஆண்மை நீட்டும். ஆடாதொடை கபம் போக்கும். இலுப்பை மண்டை கொதிப்பை போக்கும். புங்கம் பட்டை ரத்த ஒழுக்கை நிறுத்தும், வன்னி வாதம் போக்கும். வகுளம் கரு உண்டாக்கும், இப்படி மனித உடலில் தோன்றும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பட்டை மருந்தாகிறது.
நோயின்றியிருந்தால் தான் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும். மரங்கள் அதன் பட்டைகளில் உள்ள அபூர்வ சக்திகள் அறிவியல் பெருக்கத் நிற்கு முன்பாகவே சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்து தங்கள மொழிப்புரையில் எழுதி விட்டுப் போயுள்ளனர். அவர்களது அறிவு செல்வம் தான் இந்த இயற்கை மருத்துவமாகும்.